19 November 2018
RSS Facebook Twitter   

550x60

நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்

chandrika kumarathunga 05
பொதுத்தேர்தலின் மூலமாக போட்டியிடுகின்ற தீய சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய தேசம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைத்த வெற்றியினை இல்லாதொழிப்பதற்கு போட்டியிடுகின்ற பிரதிநிதிகள், மக்களால் தோற்கடிக்கப்பட வேண்டும் என இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியினை பாதுகாக்க வேண்டுமானால், முதலில் நாட்டை பாதுகாக்க வேண்டும் எனவும், ஜனவரி 8 ம் திகதி கிடைத்த வெற்றிக்கு அர்ப்பணிப்பு செய்த அனைவரும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி, ஒன்று சேர்ந்து நாட்டை பாதுகாப்பதற்காக ஒன்றுபடுமாறும், அனைத்து சுதந்திர கட்சி ஆதரவாளர்களிடமும் முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகார மோகத்தில் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிராக செயற்படுகின்ற விசமிகளை தோற்கடித்தல் மிகவும் இன்றியமையாதது எனவும் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நல்லாட்சியை முன்னோக்கி செலுத்துவதற்காக பொருத்தமான பிரதிநிதிகளை மாத்திரம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பாராளுமன்றத்தினை மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்றுகின்ற ஒரு நிறுவனமாக உருவாக்குதல் அவசியம் எனவும் கூறியுள்ளார்.

வாக்களிப்பானது, நல்லாட்சியினை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் மிகவும் புத்திசாதூர்யமாக அமைதல் வேண்டும் எனவும் அறிக்கையில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல்