அனுஷியா, திலகர் ஆகியோரின் வாக்குகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் கட்டுக் கணக்கில் பணம்!!!
- Details
- Created on Wednesday, 05 August 2015 15:55
- Category: விசேட செய்திகள்
நாட்டில் பொதுத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் குழப்பகரமான நிலையில் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விருப்பு வாக்குகளுக்காக பணம் அள்ளி வீசப்படுவதால் இந்த குழப்பகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பெரும் தலையிடியாக தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் அமைந்துள்ளனர். அதைவிட நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் எஸ்.சதாசிவமும் பெரும் தலையிடியாக விளங்குகிறார்.
ஏற்கனவே எஸ்.சதாசிவத்திற்கும் முத்து சிவலிங்கத்திற்கும் உள்ள இரகசிய உடன்படிக்கை பற்றிய தகவல்களை லங்கா நியூஸ் வெப் வழங்கியிருந்தது. கட்சிக்குள் விழும் வெட்டுக்களால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிறுத்தியுள்ள ஒரே ஒரு பெண் வேட்பாளரான அனுஷியா சிவராஜா கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம் முத்து சிவலிங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் செய்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்றாவது விருப்பு வாக்கினை அபகறிக்க முயற்சித்துள்ள எஸ்.சதாசிவம் தனது திட்டத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை அமைச்சர் ரமேஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் ஆகியோரை தனது கைக்குள் போட்டுக் கொண்டுள்ளதாக அனுஷியா சிவராஜா தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் வேட்பாளர் எஸ்.சதாசிவத்திடம் 3 லட்சம் ரூபா பணம் வாங்கிக் கொண்டு மெராயா, அக்கரப்பத்தனை, பசுமலை, டயகாமம் போன்ற பகுதிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் மூன்றாவது விருப்பு வாக்கினை அனுஷியா சிவராஜாவிற்கு வழங்காது எஸ்,சதாசிவத்திற்கு வழங்கும்படி இரகசிய பிரச்சாரம் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
சக்திவேல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மூலம் அரசியலுக்கு வர முழுமுதல் காரணமாக இருந்தது எஸ்.சதாசிவம் என்பதால் அதற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் சக்திவேல் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதேவேளை, மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ் வேட்பாளர் எஸ்.சதாசிவத்திடம் 4 லட்சம் ரூபா பணத்தை வாங்கிக் கொண்டு லபுக்கலை, புசல்லாவ, கொத்மலை பகுதிகளில் அனுஷியா சிவராஜாவிற்கு விருப்பு வாக்கு சேகரிக்காது ஆறுமுகன், முத்து சிவலிங்கம் மற்றும் எஸ்,சதாசிவம் ஆகியோருக்கு விருப்பு வாக்கு சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் தனக்கு இவ்வாறு எதிராக சிலர் செயற்படுவதை அறிந்துள்ள வேட்பாளர் அனுஷியா சிவராஜா கடும் கவலையும் அதிருப்தியும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்குள் நடக்கும் இந்த தில்லுமுல்லு வேலைகளை அறிந்த ஆறுமுகன் கட்சி முக்கியஸ்ர்களை அழைத்து கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே பிரச்சினை தமிழ் முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் புதுமுக வேட்பாளர் திலகருக்கும் ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திகாம்பரம் மற்றும் இராதாகிருஸ்ணனுக்கு வாக்களிக்குமாறும் மூன்றாவது விருப்பு வாக்கினை தங்களுக்கு அளிக்குமாறும் நுவரெலியா மாவட்ட ஐதேக வேட்பாளர்களான உதயகுமார் மற்றும் ராஜதுரை ஆகியோர் கோரி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களை பின் தொடர்ந்துச் செல்லும் உதயகுமார் அவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி மூன்றாவது விருப்பு வாக்கு பெறும் வேட்டையில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திகாம்பரம் மற்றும் இராதாகிருஸ்ணன் ஆகியோர் தங்களது கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து இவ்வாறான ஏமாற்று சதியில் சிக்கிவிட வேண்டாம் என அறிவுரை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்திற்கு வாக்களிக்காமல் உரிமைக்கும் அபிவிருத்திக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக ரீதியான எமது கருத்தாக இருக்கிறது.
அரசியல்
- நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்
- நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்
- அனுஷியா, திலகர் ஆகியோரின் வாக்குகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் கட்டுக் கணக்கில் பணம்!!!
- ராடா நிறுவன தலைவருக்கு பைத்தியம்!
- கொலையுண்ட கார்த்திகாவின் காதலன் கைது
- அடுத்த ஆட்சியில் புதிய பாதுகாப்பு செயலாளர்?
- கோட்டா - மஹிந்த இணைந்து பசிலுக்கு ஆப்பு வைத்த விதம்!
- ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல்!
- கைது செய்தமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு சென்ற சமந்த!
- ரவி கருணாநாயக்கவிற்காக மற்றுமொருவரு உயிர் பலி!
- ரணில் - மைத்திரி தேசிய அரசாங்க கனவுக்கு உதித்த - நதீஷா அடிக்கல்!
- கம்பி எண்ணுகிறார் லக்ஷமன்!
- வசிம் தாஜூடீன் சடலத்தை பொலிஸார் சுற்றிவளைப்பு! மர்ம முடிச்சு விரைவில் அவிழும்!
- மைத்திரியின் தீர்மானம் குறித்து சந்திரிக்கா அதிருப்தி
- ஹெலிகொப்டர் வழங்கப்படாமையினால் தூரப்பிரதேச கூட்டங்களை ரத்து செய்த மஹிந்த
- சோமரத்ன இடத்தில் ரவி ஜயவர்த்தன!
- ரவி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
- பெட்டியில் இருந்த பெண்ணின் சடலமும் முடிச்சவிழும் மர்மமும்!
- 3ம் திகதியின் பின் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு நல்ல காலம்!
- சாந்த பண்டார் விடைபெற்றார்!