19 September 2018
RSS Facebook Twitter   

550x60

அடுத்த ஆட்சியில் புதிய பாதுகாப்பு செயலாளர்?

hemasiri
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் பதவி ஏற்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதன் அடிப்படையில் புதிய பாதுகாப்பு செயலாளராக, மக்கள் வங்கியின் தற்போதைய தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ நியமிக்கப்படலாம் என தெரிய வருகின்றது.

பல்வேறு அமைச்சுக்களில் செயலாளர் பதவிகளை வகித்த ஹேமசிறி பெர்னாண்டோ, தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அவர் இதற்கு முன்னர் சில அமைச்சுக்களில் செயலாளராக பணியாற்றியுள்ளார். ஹேமசிறி விலகியதும் மக்கள் வங்கி தலைவராக நிஸ்ஸங்க நாணயக்கார நியமிக்கப்படவுள்ளார். அவர் ஐதேக தவிசாளராகவும் நியமிக்கப்படலாம். ஐதேக தேசிய பட்டியலில் பாராளுன்றம் சென்று தற்போதை தவிசாளர் மலிக் சமரவிக்ர அமைச்சுப் பதவி ஏற்றால் இந்த மாற்றம் நிகழக்கூடும் என கூறப்படுகிறது.

அரசியல்