22 October 2018
RSS Facebook Twitter   

550x60

கோட்டா - மஹிந்த இணைந்து பசிலுக்கு ஆப்பு வைத்த விதம்!

gota basil
பொதுத் தேர்தல் சூடுபிடித்த பின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்காக இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தற்போதை பிரச்சார நடவடிக்கையில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் கொள்கை விஞ்ஞாபனம் தயாரிப்பின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்கு காரணம் என கூறப்பட்டுகிறது.

பசில் ராஜபக்ஷவின் ஆலோசகர்களான ஜகத் வெள்ளவத்த, தம்ம திஸாநாயக்க, நிமல் பண்டார உள்ளிட்ட குழு தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்துள்ள நிலையில் கோட்டாபயவின் உபதேசத்தில் தயான் ஜயதிலக, நாலக கொடஹேவா, சதித ஹேரத் உள்ளிட்ட குழு பிரிதொரு விஞ்ஞாபனம் தயாரித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உபதேசகர்கள் சிலரும் தேர்தல் விஞ்ஞாபனத்தை வேறாக தயாரித்துள்ளனர். பசில் ராஜபக்ஷ குழு தயாரித்த விஞ்ஞாபனத்தை வௌியிட தயார் செய்யப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பசிலை திட்டி அந்த ஆவணத்தை நெருப்பு வைக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் கோட்டாபய மற்றும் ஜனாதிபதியின் குழு தயாரித்த விஞ்ஞாபனம் வௌியிட்டு வைக்கப்பட்டது. அதில் 12 அம்சங்கள் கோட்டாபய குழுவினரது என்றும் நல்லாட்சியுடன் தொடர்புடைய இறுதி அம்சம் ஜனாதிபதி குழுவினுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்