17 July 2018
RSS Facebook Twitter   

550x60

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல்!

thusitha madawa
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் துசித ஹல்லொலுவவிற்கு பிரபல வர்த்தகர் மற்றும் கப்பம் பெறுநர் மாதவ வத்தேகமவால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தேகமவிடம் இருந்து பிரிந்துள்ள அவரது மனைவிக்கு அநீதி இழைக்க வேண்டாம் எனக் கோரச் சென்ற வேளை துசிதவிற்கு இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து துசித ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதேசகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் துசித தனது பாதுகாப்பை அதிகரித்துக் கொண்டு கொழும்பை விட்டு வௌியில் மாத்தறை பகுதிக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பெயரை விற்று உள்நாட்டு மற்றும் இந்திய வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற 200 லட்சம் ரூபாவை கெசினோவிற்கு கொண்டு சென்று 30 நிமிடத்தில் நாசமாக்கியதாக மாதவவின் மனைவி கூறியது தொடர்பில் சத்துர துசித வினவியபோது இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வத்தேகம சில வாரங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரரும் எத்தனோல் வியாபாரியுமான முத்தையா சசிதரனுடன் இந்தியா சென்று பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் அர்ஜுனவின் பெயரை விற்று இந்திய வர்த்தகர்களிடம் அதிக பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் துசித கல்லொலுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்