19 January 2018
RSS Facebook Twitter   

550x60

கைது செய்தமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு சென்ற சமந்த!

hrc 2
மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் சமந்த கொரளேஆராச்சி மனித உரிமை ஆணைக்குழுவில் HRC 2753/15 என்ற இலக்கத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கடந்த வாரம் தன்னை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ததன் மூலம் தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சமந்த முறையிட்டுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக சிலாபம் வைத்தியசாலை பணிப்பாளர் தினுஷா பெனாண்டோ, சிலாபம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சிலாபம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 30ம் திகதி சமந்த கொரளேஆராச்சி மற்றும் பெண் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அரசியல்