22 October 2018
RSS Facebook Twitter   

550x60

கம்பி எண்ணுகிறார் லக்ஷமன்!

lakshman wasantha
மஹிந்த ராஜபக்ச தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இவ் உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது. லக்ஸ்மன் வசந்த பெரேராவினால் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். லக்ஸ்மன் வசந்த பெரேரா இன்று காலை கைது செய்யப்பட்டார்.

அரசியல்