20 April 2018
RSS Facebook Twitter   

550x60

வசிம் தாஜூடீன் சடலத்தை பொலிஸார் சுற்றிவளைப்பு! மர்ம முடிச்சு விரைவில் அவிழும்!

thajudeen
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீனின் உட​லை தோண்டி எடுக்கும்வரை உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தெஹிவளை வைத்தியசாலையில் வீதியில் உள்ள பள்ளிவாசல் மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சடலம் புதைக்கப்பட்டுள்ள பிரதேசம் சாதாரண மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பற்கள் உடைக்கப்பட்டு, விலா எலும்பு முறிக்கப்பட்டு, கழுத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தி, கடுமையாக சித்திரவதை செய்து றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு இக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து என மூடி மறைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலேசானைகளை கோரியுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்த பின்னர், உடலை தோண்டி எடுப்பதற்கான நீதவானின் உத்தரவை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அரசியல்