22 October 2018
RSS Facebook Twitter   

550x60

ஹெலிகொப்டர் வழங்கப்படாமையினால் தூரப்பிரதேச கூட்டங்களை ரத்து செய்த மஹிந்த

mr p0intகுருணாகல் மாவட்ட வேட்பாளரும்
முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு இம்முறை நாடு முழுவதும் நடைபெறும் கூட்டங்களுக்கு காரில் மாத்திரம் செல்ல நேரிட்டுள்ளமையினால் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தூரப்பிரதேச கூட்டங்களுக்கு செல்வதற்கு ஹெலிகொப்டர் வழங்கப்படாதமையினால், அவர் தூரப்பிரதேச கூட்டங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து பிரச்சினை காரணமாக தூரப் பிரதேசத்து கூட்டங்களை ரத்து செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த நரஹென்பிட்டிய தேரர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை அதிரிக்குமாறு கூறி ஹெலிகொப்டர் நிதி ஒன்றினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் முதல் கட்டமாக 12 லட்சம் நிதி கிடைத்துள்ள நிலையில், அதனை கொண்டு 2 முறை பயணம் செய்வதற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளது.

எப்படியிருப்பினும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி பயணம் செல்வதற்கும் இராணுவத்தினரின் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதோடு அதற்காக கட்டணங்களை அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள ஆரம்பித்த போதே செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

அரசியல்