19 January 2018
RSS Facebook Twitter   

550x60

சோமரத்ன இடத்தில் ரவி ஜயவர்த்தன!

ravi jayawardhana
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து சோமரத்ன திஸாநாயக்க பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்ட பின் அந்த வெற்றிடத்தை நிரப்ப ரூபவாஹினி பணிப்பாளர் சபை உறுப்பினர் ரவி ஜயவர்த்தனவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பட்டதாரி என்பதுடன் இங்கிலாந்து லேங்ஷெயர் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் தொடர்பு பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் புல்பிரைட் புலமைபரிசில் பெற்றவர். இவர் சிறிது காலம் சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சித் துறையில் இவர் பிரசித்தம் பெற்றவர் ஆவார்.

அரசியல்