20 April 2018
RSS Facebook Twitter   

550x60

3ம் திகதியின் பின் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு நல்ல காலம்!

somarathna dissanayaka
எதிர்வரும் ஓகஸ்ட் 3ம் திகதிக்குப் பின் தமது நிறுவனத்திற்கு நல்ல காலம் பிறப்பதாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ராஜபக்ஷ ஆட்சியில் கூட்டுத்தாபனம் எடுக்கமுடியாத அளவு வீழ்ச்சி கண்டதாகவும் ஆனால் தற்போது அந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளதாகவும் 3ம் திகதி கூட்டுத்தாபன தலைவர் சோமரத்ன திஸாநாயக்க பதவி விலகிய பின் தமது நிறுவனத்திற்கு நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் என ஊழியர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் சோமரத்ன திஸாநாயக்க 3ம் திகதியுடன் பதவி விலகுவதாக இன்று காலை அறிவித்தார். கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு கடைக்குச் சென்ற அவரது கையாள் சோமரத்ன திஸாநாயக்கவும் மனைவியும் ராஜபக்ஷவிற்காக முன்நின்றனர். அதற்காக தொலைக்காட்சியில் விசேட நிகழ்ச்சிகளையும் செய்தனர்.

எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் இறுதிக் கட்டத்தில் சோமரத்ன மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பயனாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்