17 July 2018
RSS Facebook Twitter   

550x60

சாந்த பண்டார் விடைபெற்றார்!

shantha bandara
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அறிவித்துள்ளர். இன்று (30) கலை தம்மதெனியவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு நடத்தி அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை என சாந்த பண்டார தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கிய அவர், தேர்தலின் பின் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல்