17 July 2018
RSS Facebook Twitter   

550x60

இலங்கையில் நிதிமோசடியில் ஈடுபட்ட கனேடிய அரச சார்பற்ற நிறுவனம்

law symbolஇலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கனடாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை, 25 லட்சம் டொலர்களை கனேடிய அரசாங்கத்துக்கு செலுத்துமாறு கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த அரச சார்பற்ற நிறுவனம் 2004ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்னர் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிறுவனத்துக்கு கனடாவின் சர்வதேச அபிவிருத்தி ஸ்த்தாபனத்தினால் வழங்கப்பட்ட நிதியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே கனடாவின் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

- http://www.hirunews.lk/ -

அரசியல்