இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அல் ஒமரி பள்ளிவாசல் முற்றாக சேதம்!
- Details
- Created on Monday, 04 August 2014 09:45
- Category: விசேட செய்திகள்
பல நூற்றாண்டு வரலாறு கொண்ட காசாவின் ஜபலியா நகரில் இருக்கும் அல் ஒமரி பள்ளிவாசல் கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நடத்திய குண்டுத் தாக்குதல்களால் முற்றாக சேதமடைந்துள்ளது.
அல் ஒமரி பள்ளிவாசல் குறித்த இடத்தில் கி.பி. 647 ஆம் ஆண்டு முதல் நிலைகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் இஸ்ரேல் வான் தாக்குதலில் இந்த பள்ளிவாசல் தரைமட்டமாகியுள்ளது. இந்த பள்ளிவாசலின் முகப்பு வாயில் மற்றும் மினாரத் மம்லூக் காலத்தைச் சேர்ந்தது. அல்லது குறைந்தது 500 ஆண் டுகள் பழைமையான தாகும்.
ஜபலியாவின் மத்திய பகுதியில் உள்ள இந்த பள்ளிவாசலை உள்ளூர் மக்கள் 'பெரிய பள்ளிவாசல்' என்று அழைத்துவந்தனர். கடந்த சனிக்கிழமை காசாவில் ஐந்து பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள் ளது. அங்கு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் ஹமாஸ் கட்டளைத்தளம் மற்றும் பயிற்சி முகாம் இருந்ததாகவும் இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மற்றுமொரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் முஅத்தின் என்று அழைக்கப்படும் குறித்த பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 28 தினங்களாக இஸ்ரேல் காசா மீது நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 10 பள்ளிவாசல்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. தவிர 80 பள்ளிவாசல்கள் மற்றும் இரு கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதியளவில் தகர்க்கப்பட்டுள்ளன.
அரசியல்
- நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்
- நல்லாட்சிக்கு எதிரான தீய சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்
- அனுஷியா, திலகர் ஆகியோரின் வாக்குகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் கட்டுக் கணக்கில் பணம்!!!
- ராடா நிறுவன தலைவருக்கு பைத்தியம்!
- கொலையுண்ட கார்த்திகாவின் காதலன் கைது
- அடுத்த ஆட்சியில் புதிய பாதுகாப்பு செயலாளர்?
- கோட்டா - மஹிந்த இணைந்து பசிலுக்கு ஆப்பு வைத்த விதம்!
- ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு மரண அச்சுறுத்தல்!
- கைது செய்தமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு சென்ற சமந்த!
- ரவி கருணாநாயக்கவிற்காக மற்றுமொருவரு உயிர் பலி!
- ரணில் - மைத்திரி தேசிய அரசாங்க கனவுக்கு உதித்த - நதீஷா அடிக்கல்!
- கம்பி எண்ணுகிறார் லக்ஷமன்!
- வசிம் தாஜூடீன் சடலத்தை பொலிஸார் சுற்றிவளைப்பு! மர்ம முடிச்சு விரைவில் அவிழும்!
- மைத்திரியின் தீர்மானம் குறித்து சந்திரிக்கா அதிருப்தி
- ஹெலிகொப்டர் வழங்கப்படாமையினால் தூரப்பிரதேச கூட்டங்களை ரத்து செய்த மஹிந்த
- சோமரத்ன இடத்தில் ரவி ஜயவர்த்தன!
- ரவி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி
- பெட்டியில் இருந்த பெண்ணின் சடலமும் முடிச்சவிழும் மர்மமும்!
- 3ம் திகதியின் பின் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு நல்ல காலம்!
- சாந்த பண்டார் விடைபெற்றார்!