24 April 2019
RSS Facebook Twitter   

550x60

ஐ.நா. நோக்கிய ஒரு மில்லியன் கையெழுத்து வேட்டை பயன் தருமா?

article
புலம் பெயர் அரசியல் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இக் கையழுத்து வேட்டை நமது கவனத்தை ஈர்ப்பதற்கு நான்கு காரணங்களை நாம் இனம் காணலாம். முதலாவது காரணம் இக் கையெழுத்து இயக்கத்தின் காலப் பொருத்தமும் அதன் கோரிக்கையும் சார்ந்தது. Read more...

போர்க்குற்ற விசாரணையும் சுய நிர்ணைய உரிமைக்கான போராடமும் எப்படி அழிக்கப்பட்டது?

aaaa
தமிழகம் என்றால் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வை.கோ சீமான் போன்ற இன்னோரன இனவாதிகளும் மட்டுமே ஈழத் தமிழர்களின் கண் முன்னால் தோன்றுவார்கள். 80 களில் ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு இந்திய அரசும் அதன் உளவுத்துறையான உம் ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கிச் சீரழித்த வேளையில் உட் புகுந்த இனவாதிகளுள் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாசும் ஒருவர். ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றொரு முகமும் உண்டு. ஆதிக்க சாதி வெறி என்பது தான் அது.

இளவரசன்
இளவரசன்

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டமைக்காக இளவரசன் என்ற இளைஞனைக் கொலை செய்து வன்முறையைத் துண்டிவிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக வினவு என்ற இணையச் சஞ்சிகை நடத்திய ஆய்வு ஒன்றின் ஆரம்பப் பகுதிகள் கீழே:கீழ்வருமாறு ஆரம்பிகிறது:

“தர்மபுரி – சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான விடிவெள்ளியாய் முளைத்த நக்சல்பாரி இயக்கம் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த மாவட்டம். இம்மாவட்டத்தின் நாயக்கன் கொட்டாய் தான் அந்த எழுச்சியின் குவிமையமாய் இருந்தது. நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டெழுந்த உழைக்கும் மக்கள் சாதித் தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை அடக்கி ஒடுக்கியிருந்தனர்.

1980களுக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளால் நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவுக்கு உள்ளாகியிருந்த நிலையில் சாதி அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் வளர்த்து விடப்பட்டன. பல்வேறு சாதி அமைப்புகள் தமது சாதி மக்களைத் திரட்டி தேர்தல் அரசியலில் செல்வாக்கை வளர்க்க முயற்சித்தன.

இந்நிலையில் தான் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நாயக்கன் கொட்டாய் பகுதியிலிருக்கும் மூன்று கிராமங்களின் தலித் குடியிருப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞருக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்று சொல்லப்பட்டாலும், ஆதிக்க சாதிவெறி பிடித்த வன்னியர் சங்கத்தின் திட்டமிடல் தான் முக்கியக் காரணம்.

தர்மபுரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் சாதி மீண்டும் முன்னணிக்கு வந்து விட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ராமதாசின் முயற்சியால் 42 ஆதிக்க சாதிச் சங்கங்கள் ஒன்றிணைந்தன. ‘காதல் நாடகத் திருமணங்களை’ எதிர்ப்பதாகவும், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்” தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கைகளை நிறைவேற்றினர். தலித் அல்லாதோர் இயக்கம் ஒன்றும் துவங்கப்பட்டது.”

ராமதாஸ்
ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தன்னார்வ நிறுவனமே பசுமைத் தாயகம் என்ற அமைப்பு. தன்னார்வ நிறுவனங்கள் தொடர்பான இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் வெளி நாட்டு நிதியில் இயங்கும் அமைப்புக்களில் ஒன்றாக பசுமைத் தாயகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 75901175 என்ற இலக்கத்தின் கீழ் பசுமைத் தாயகம் அன்னிய நிதியில் இயங்கும் நிறுவனமாக இந்திய அரச ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. பசுமைத் தாயகம் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தன்னார்வ நிறுவன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலக சுகாதார நிறுவனத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மனித நேயமுள்ளவர்களும், ஜனநாயக வாதிகளும், மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் அஞ்சும் போராட்ட அமைப்புக்களும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து அன்னிய நிதியில் இயங்கும் அமைப்புக்களை அழிக்கும் நிறுவனங்களாகவே காண்கின்றனர். ஈழப் போராட்ட அமைப்புக்களோ இவ்வாறான அமைப்புக்களின் வால்களாக தொங்குகின்றன. இதனால் தான் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய நாடுகளால் தூண்டிவிடப்பட்ட நாசகார நடவடிக்க்கையாக உலக மக்களில் பெரும்பாலனவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்ட போராட்டம் சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற இனவாதிகளதும் சாதி வெறியர்களதும் பிடிக்குள் முடங்கிப்போனது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தும் நோக்கத்துடன் உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக மையம் போன்ற பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவால் தொடர்க்கி வைக்கப்பட்டது.

சாதி வெறியைத் தூண்டி அழிவை ஏற்படுத்தும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பசுமைத் தாயகம் அமைப்பிற்கும் எந்த அன்னிய சக்திகள் நிதி வழங்கி வருகின்றன என்பது அதன் நடவடிக்கைகள் ஊடாகவே அனுமானிக்க முடியும்.

உலகில் மக்கள் போராடங்களை சிதைத்து அதிகாரவர்க்கத்தின் அரசியலை நிறுவும் நோக்கத்துடன் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஏகாதிபத்தியக் கூறுகளே தன்னார்வ நிறுவனங்கள். .

அந்தப் பட்டியலில் பசுமைத் தாயகம் முதலாவது இடத்திலுள்ளது. ராமதாசின் மகனும் இந்திய காங்கிரஸ் அரசில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியவருமான அன்புமணி ராமதாஸ் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார். ஈழப் போராட்டத்தை அழித்துச் சிதைத்ததில் அன்னிய நிதியில் இயங்கிய தன்னார்வ நிறுவனங்களுக்கும் பெரிம் பங்குண்டு.

வன்னி இனப்படுகொலை முடிந்த பின்னரான காலப்பகுதி முழுவதும் என்.ஜீ.ஓ களிம் ஆதிக்கத்திற்கான காலப்பகுதியாகும்.

ஐ.நா பார்த்துக்கொண்டிருக்க, அமெரிக்கா சட்டலைட்டில் வேடிக்கை பார்க்க லட்சக் கணக்கில் மக்கள் அழிகப்பட்டு வன்னிப் படுகொலைகள் முடித்துவைக்கப்பட்டன. அதன் பின்னர் போராட்டத்தின் எச்சங்களையும், போராட்ட உணர்வுள்ளவர்களையும் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் போராட்ட சக்திகளை உள்வாங்கி அழிக்க ஆரம்பித்தன.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களைத் தண்டிக்குமாறு எழுந்த மக்கள் போராட்டங்களை காலதாமத்தப்படுத்தி ஆறு வருடங்களை நகர்த்தி இன்று மக்களின் உணர்வுகளைத் திசை திருப்பியுள்ளது.

ஐ.நாவில் விசாரணை நடத்துகிறோம் என்ற பெயரில் மக்கள் பற்றுள்ளவர்களை உள்வாங்கி அமெரிக்கா தனது பிடிக்குள் வைத்துக்கொண்டது. புலம்பெயர் அமைப்புக்களையும் அதன் செயற்பாட்டாளர்களில் சிலரையும் அமெரிக்கா தனது நலன்களுக்காகச் செயலாற்ற வைத்தது.

அவர்கள் தமிழ் மக்களை அழிக்கும் அன்னிய ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டனர். இவற்றுள் ஒன்று தான் அமெரிக்க சார்பு அமைப்பான பசுமைத் தாயகம்.

btfபோர்க்குற்ற விசாரணை என்ற பூச்சாண்டியை இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டது. மாற்றப்பட்ட மைத்திரிபாலவின் ஆட்சி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ‘இலங்கை ஜனநாயகத்தை மீட்டுள்ளது, நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஊழல் ஒழிக்கப்படுகிறது’ என்றெல்லாம் புகழ்பாடியுள்ளார். இவ்வாறான சூழலில் போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு தனது நாட்டின் உள்ளேயே நடத்தினாலே போதுமானது என அமெரிக்கா குறிப்பிடுகிறது.

வடக்கும் கிழக்கும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளமை, திட்டமிட்ட குடியேற்றங்கள் உட்பட சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை, அதற்கான இழந்து போன மக்கள் போன்ற எதைப் பற்றியும் குறிப்பிடாது, இலங்கை அரசு அமெரிக்காவின் நண்பன் என அவர் கூறுகிறார்.

ஆக, போரை நடத்தி மக்களை அழித்துவிட்டு, தமதுக்குச் சார்பான ஆட்சி ஒன்றை அமைத்தாலே அமெரிக்க அரசிற்குப் போதுமானது.

இந்த இலங்கை அரசின் எதிரிகளாகக் கருதப்பட்டவர்களும் அமெரிக்க அடியாட்படைகளே. இரண்டு எதிரிகளையும் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு தேவையான போது அமெரிக்க அரசு பயன்படுத்திக்கொள்கிறது. இவ்வாறு பயன்படும் அடிமைகளாக மாறிப்போன புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறியர்களோடும், கொலையாளிகளோடும் திருடர்களோடும் கூட்டுவைத்துக்கொள்கின்றனர்.

கடந்த ஆறு வருடங்களில் ஈழப் போராட்டம் உலக மக்கள் மத்தியிலிருந்தும், ஜனநாயக முற்போக்கு சக்திகளிடமிருந்தும் திட்டமிட்டு அன்னியப்படுத்தப்பட்டு இப்போது சேடமிழுத்துக்கொண்டிருக்கிறது.

இன்று வரைக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் சாதி வெறி அமைப்பான பசுமைத் தாயகத்தின் துணையுடனேயே ஐ.நாவிற்குச் சென்று வந்திருக்கின்றன என்பது இதற்குச் சிறந்த உதாரணம். உலகம் முழுவதும் ஐ.நாவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தன்னார்வ நிறுவனங்களின் பட்டியலில் பசுமைத் தாயகத்தின் பெயர் முதலாமிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் துணையோடு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்க்கும், அமெரிக்க சார்பு அரசிற்கும் எதிராக அமெரிக்க நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனம், அமெரிக்க அடியாள் படைகளான புலம்பெயர் அமைப்பான பீ.ரி.எப் உடன் இணைந்து நடத்தும் நாடகமே போர்க்குற்ற விசாரணை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை?

இனிமேல் இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு முழுத் தமிழினமும் அழிக்கப்பட்டாலும், புலம் பெயர்கள் கைதட்டி விசிலடிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. தாம் இழைத்த தவறுகளையும் தமிழ்ப் பேசும் மக்களை ஏகாதிபத்தியங்களின் அடிமைகளாக மாற்றி போராட்டத்தை அழித்துச் சிதைத்தமைக்காகவும் புலம்பெயர் அமைப்புக்கள் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும்.

ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படையாகச் செயற்பட்டு அழிக்கப்பட்ட போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் புதிய அரசியல் மக்கள் மத்தியில் முன்வைக்கபட வேண்டும்., ஈழப் போராட்டம் காட்டிக்கொடுக்கும் ஏகாதிபத்திய அடியாட்படைகளால் முன்னெடுக்கப்படும் நாசகார நடவடிக்கை அல்ல என உலக மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். தவறினால், புலம்பெயர் அமைப்புக்களும் இலங்கை அரசும், அமெரிக்க இந்திய அரசுகளும் கூட்டிணைந்து எஞ்சியிருக்கும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிக்கும்.

நிறைவேறாமல்போன மின்னல் ரங்காவின் நோக்கம்...

rang
இலங்கை அரசியல் வரலாற்றை தானே கரைத்துக்குடித்தவர் அல்லது இலங்கை அரசியல் தலைமையைத் தீர்மானிக்கும் கிங்மேக்கர் என்ற பல்வேறுபட்ட நாமங்களுடன் சக்தி ரீவியினுடைய மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகின்ற நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரட்ணம் ஸ்ரீரங்காவுடைய ஊடகவியலாளர் வரலாறு முட்பாதைகளைக் கொண்டது. Read more...

மலையகத்தில் வட்டாரங்களை மாத்திரம் உருவாக்குவது ஒரு கண் துடைப்பாகும்

Nuwara Eliya
நாடு பரந்தளவில் இலங்கையில் 335 உளட்ளுராட்சி நிறுவனங்கள் செயற்படுகையில்15 இலட்சம் மலையக மக்களுக்காக நுவரெலிய, அம்பகமூவ, அட்டன் ஆகிய மூன்றே மூன்று உள்ளுராட்சி நிறுவனங்கள் மாத்திரமே காணப்படும் போது, இந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் வட்டாரங்களை உருவாக்குவது மாத்திரம் எந்த விதத்திலும் மலையக மக்களுக்கு பிரயோசனமானதாக அமையாது. மாறாக வட்டாரங்கள் மாத்திரம் உருவாக்குவது ஒரு கண் துடைப்பாகவே அமையுமென மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் தற்போது நாடுமுழுதும், வட்டாரங்கள் அமைத்து புதிய முறையில் வட்டார விகிதாச்சார முறையில் தேர்தலை நடத்துவதற்கான, நடவடிக்கைகள் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சு மேற்கொண்டுவரும் நிலையில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மலையக மக்களுக்காக நுவரெலியா பதுளை, கண்டி இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில், இருபதுக்கு மேற்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களை, உள்ளுராட்சி சீர்திருத்தத்தில் எல்லை மீள் நிர்ணயம் செய்யக்கூடிய சூழல் இருந்த போதும், வெறுமனே அம்பகமூவ, நுவரெலியா, அட்டன் போன்ற உள்ளுராட்சி நிறுவனங்களில் வட்டாரங்களை பிரிப்பதற்கு மாத்திரம் எல்லை மீள் நிருணயத்தை மேற்கொண்டிருப்பது வேண்டுமென்றே, உள்ளுராட்சி சபைகளை மலையக மக்கள் மத்தியில் உருவாக்குவதை தவீர்ப்பதற்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது பாராளுமன்ற தேர்தல் தொகுதிகளுக்கு கட்டாயம் எல்லை மீள் நிருணயம் செய்யவேண்டுமென்று சகல கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் போது, உள்ளுராட்சி சீர்திருத்தத்தில் மலையக மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், உள்ளுராட்சி நிறுவனங்கள் மிக குறைவாக இருக்கின்ற நிலையில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முயற்சியை இதுசம்பந்தப்பட்ட உள்ளுராட்சி அமைச்சு தவிர்த்திருப்பது இம்மக்கள் மத்தியில் உள்ளுராட்சி நிறுவன உருவாக்கத்தை வேண்டுமென்றே தடு;த்திருப்பது போல் தெரிகின்றது.
2010ம் ஆண்டு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அதன் செயலாளர் திருமதி ளு.மு. வீரதுங்க அவர்களை எல்லை மீள் நிருணய குழுவின் செயலாளராகக்கொண்டு எல்லை நிருணயம் தொடர்பாக முன்மொழிபுகளைப் பெற்று, நுவரெலியாவில் தற்போது காணப்படும் 5 பிரதேச செயலகங்களுக்கு மேலதிகமாக மேலும் 7 பிரதேச செயலகங்களை எல்லை நிருணயம் செய்து அதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.

அதன்படி நுவரெலியா பிரதேச செயலகத்தை தலவாக்கலை, அக்கரப்பத்தனை நுவரெலியா ஆகிய மூன்று பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும்,
அம்பகமூவ பிரதேச செலயகத்தை மஸ்கெலியா, நோர்வூட், கினிகத்தேன என்று மூன்று பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும், ஹங்குரான்கெத்தயை, இரு பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும், வலப்பனை இரு பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும், கொத்மலையை இரு பிரதேச செயலகங்களாக எல்லை நிருணயம் செய்வதற்கும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேலதிகமாக தற்போதுள்ள பிரதேச செயலகங்களோடு மேலும் 7 புதிய பிரதேச செயலகங்களுக்கான எல்லை நிருணயம் செய்யப்பட்டிருந்தது.


இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகங்கள் எல்லை மீள் நிருணயம் செய்வதன் மூலம் 12 பிரதேசசபைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். இதன்படி 4 இலட்சம் மலையக தமிழ் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தில், குறைந்தது அவர்களுக்கென 7 பிரதேசசபைகளை மாநகரசபை, நகரசபைகள் என 10 உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் பொது நிருவாக அமைச்சு இதனை கிடப்பில் போட்டு விட்டு தற்போது வெறுமனே வட்டாரங்களை மாத்திரம் உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க மலையக மக்கள் வாழும் பகுதிகளில், மிக பெரிய குறைப்பாடாக நிலவும் உள்ளுராட்சி நிறுவனங்களின் உருவாக்கத்தை தடைச்செய்துள்ளது. ஆகவே மேற்படி வட்டார அறிமுகம் மாத்திரம் நுவரெலிய, பதுளை, கண்டி இரத்தினபுரி போன்ற மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கு பெரிய பிரயோசனமாக அமைய மாட்டாது.உள்ளுராட்சி நிறுவனங்கள் தான் உருவாக்கப்படவில்லை என்றாலும் கூட, நுவரெலியா மாவட்டத்தில் உருவாக்கிய வட்டார முறையிலும் பாரபட்சமே காணப்படுகின்றது.

தலா இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஜனத்தொகையைக் கொண்ட நுவரெலியாவிற்கும், அம்பகமூவ பிரதேச சபைகளுக்கும் 35, 31 வட்டாரங்களே எல்லை மீள் நிருணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு இலட்சத்திற்கும் குறைந்த வலப்பனை ஹங்குராங்கெத்த, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளுக்கும் 33, 32, 24 என வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் வட்டாரம் ஒதுக்குவதிலும் கூட ஜனத்தொகை, வாக்காளர் அடிப்படையில் கூடுதலான அம்பகமூவவுக்;கும், நுவரெலியாவிற்கும் வட்டாரங்கள் ஒதுக்கப்படவில்லை. வட்டாரம் ஒதுக்குவதிலும் நுவரெலியா,அம்பகமூவ பகுதிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுள்ளது.

இன்று நாட்டில் தேர்தல் சீர்திருத்தம் எல்லை மீள் நிருணயம் பற்றி முனைப்பாக பேசப்படும் நிலையில், உள்ளுராட்சி தேர்தல் சீர்திருத்தம,; மலையக மக்கள் செறிவாக வாழும் நுவரெலிய, பதுளை, கண்டி இரத்தினபுரி போன்ற மலையக மாவட்டங்களில,; மலையக இந்த சந்தர்ப்பத்தில் எல்லை மீள் நிருணய நடவடிக்கைகளில், இம்மக்கள் மத்தியில், மிகப் பெரிய குறைப்பாடாக காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு, உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கான எல்லை நிருணயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதன் பிறகே வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும்.

அதற்கு மாறாக வெறுமனே வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது ஒரு மாபெரும் கண்துடைப்பாகும்.
மலையக மக்கள் மத்தியில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கு பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சு முன்னுரிமை வழங்க வேண்டும். 2010ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள் நிருணய நடவடிக்கையை மீண்டும்சம்பந்தப்பட்ட அமைச்சு நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் மலையகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, சிவில் அமைப்புக்கள், மலையக தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சரை, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். ஒரே நாளில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலில், ஏற்கனவே ஒதுக்கொண்ட 12 பிரதேசசெயலகங்களை உருவாக்கி 12 பிரதேசசபைகளுக்கான உள்ளுராட்சி தேர்தலாக நுவரெலியா மாவட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என ம.ம.மு செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார். இதே நடைமுறை மூலம் பதுளை கண்டி, இரத்தினபுரி போன்ற மலையக மக்கள் வாழும் மாவட்டங்களிலும் புதிய உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அருந்ததியர்களுக்கு நீதி எங்கே? - என்.சரவணன்

aru
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்கள், காலங்காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த லயன் வாழ்க்கை முற்றுபெறத் தொடங்கியிருக்கிறது. பல ஆண்டுகாலப் போராட்டத்தின் பலன் இது.
“பசுமை பூமித்திட்டம்” நீதியான முறையில் முழுமை பெற அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தள்ளப்பட்டுள்ளனர் மலையக மக்கள். காம்பரா வாழ்கையிலிருந்து விடுதலை பெற்று தம்மால் செழிப்பாக்கப்பட்ட நிலத்தில் 200 வருடங்களின் பின்னர் சொந்தமாக ஒரு காணித்துண்டை பெற்றுகொள்வதற்கான பயணம் பல முள் நிறைந்த பயணங்களைத் தாண்டி வந்தடைந்துள்ளது. Read more...

முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட அரசியல் நியாயம்: தமிழர் தலைமைகளின் கூட்டுச் சதி

rajitha speaking
“ஆப்கானிஸ்தானிலும், அரபு நாடுகளிலும், ஆபிரிக்காவிலும் ஆசிய நாடுகளிலும் எங்களுக்கு அக்கறையிருக்கிறது. அங்கு மனித் உரிமைகள் மீறப்படும் போதும் மக்களுக்காகக் குரல் கொடுப்போம், அந்த நாடுகள் எல்லாம் அபிவிருத்தியடைவதற்கு நாம் உறுதுணையாக இருப்போம். ” இப்படித்தான் மேற்கு ஏகபோக நாடுகள் உலக மக்களை ஏமாற்றிக்கொண்டே அவர்களைச் சுரண்டி ஏழைகளக்கி அழித்து வருகின்றன.

Read more...

தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை-39

ltte
1948ல் பிரித்தானியர்களிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக சொல்லப்படுகின்ற காலம் தொட்டு தமிழீழ மக்கள், சிங்கள ஆட்சியாளர்களால் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு திட்டமிட்ட இனவழிப்பை எதிர்கொண்டு வந்தனர்.
அதனை எதிர்த்து ஈழத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக நடாத்திய போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்ட ஒரு சூழலில் தான், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் வரலாற்றின் குழந்தையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் பிறப்பெடுத்தது.  Read more...

விடுதலைப் புலிகளின் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு-ஒரு பார்வை (2002-2015)

prab

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.

தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக, அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக, ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது.

அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை.

இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங்களதேசத்தையும் இணைக்கும் ஏ9 பாதை திறந்துவிடப்பட்டது.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும். தமிழீழ விடுதலையின் மூலஇயக்கு சக்தியான தேசியத்தலைவர் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு பேட்டிகள் வழங்கி இருந்தாலும் 2002 ஏப்ரல் 10ம்நாள்தான் விடுதலைப்புலிகள் தமது தலைவருடன் உலக பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் அழைப்பை விடுத்திருந்தனர்.

உலக ஊடகங்களுக்கும் இது வித்தியாசமான ஒரு அனுபவமாகவே அவர்கள் பதிந்தார்கள்.

அதுநாள் வரைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரகடனமாக, வேலைத்திட்ட அறிவிப்பாக, உலகத்துக்கு செய்தியாக உலகம் கணித்து வந்தது ஒவ்வொரு மாவீரர் நாளிலும் தேசியத்தலைவரின் குரலில் வெளிவரும் மாவீரர் உரையை வைத்துதான்.

முதல்முறையாக தமது சந்தேகங்களை தமது கேள்விகளை தேசியத்தலைவரிடம் நேரடியாக கேட்பதற்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது.

இது ஒரு புறம்இருக்க, இந்த சந்திப்பை சிங்களதேசத்தின் ஆளும்தரப்பு அவ்வளவாக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாக இல்லை. தேசியத்தலைவரின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நேரடியாக சிங்களதேசத்தின் தேசிய தொலைக்காட்சியாக கருதப்பட்ட ரூபவாகினியில் நேரடியாக ஒளிபரப்பியே தீரவேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் சிங்களத்துக்கு ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளை சுற்றி மர்மங்களையும் விடைகள் இல்லாத கேள்விகளையும் தொடர்ச்சியாக இருக்கவைப்பதன் மூலமே விடுதலைப்புலிகளை ஒரு பயங்கர சக்தியாக உலகின் கண்களுக்குள் தக்க வைக்கமுடியும் என்பதே சிங்களத்தின் எண்ணம்.

இத்தகைய மர்மங்கள் நீங்குவதிலோ, உலகின் கேள்விகளுக்கு விடுதலைப் புலிகளின் அதிஉச்சமான தலைவரே நேரடியாக பதில் வழங்குவதோ சிங்கள ஆட்சியாளர்களுக்கு பிடிப்பதமானதாக இருந்திருக்கவே முடியாது.

ஆனாலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம்,மற்றும் முக்கியமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற நாடகத்தில் இத்தகைய அடுத்த தரப்பினரின் இத்தகைய ஊடக சந்திப்புகளை மறுப்பதோ தடை செய்வதோ முடியாது என்பதால்தான் சிங்களமும் இதற்கு ஒப்புகொள்வதாக சொல்லவேண்டி வந்தது.

ஆயுதந் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஒரு அமைப்பு என்ற முறையில் மாறிவரும் உலக நிலைமைகளில் தமது நிலைப்பாட்டை வெளி உலகத்துக்கு பகிரங்கமாக அதே நேரம் முடிவுகளை எடுக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான தேசியத்தலைவரின் குரலில் சொல்வதற்கான சந்தர்ப்பாக இதனை கணித்திருந்தார்கள்.

அதிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடப்பதற்கு சரியாக ஏழு மாதத்துக்கு முன்னர் உலகின் அனைத்து சமநிலைகளையும் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் பற்றிய கணிப்புகளையும் தலைகீழாக மாற்றிய இரட்டை கோபுரச் சம்பவம் 2001 செப்படம்பர் 11ல் நிகழ்ந்தேறி இருந்தது. (இந்த கேள்வியும் தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது).

இராணுவ பல சமநிலையில் ஏறத்தாழ சிங்கள தேசத்துக்கு ஒப்பானதாக விடுதலைப்புலிகள் அந்நேரம் பலத்துடன் இருந்தாலும் செப்டம்பர் 11க்கு பின்னான உலகின் கேள்விகள் வித்தியாசமானதாக இருந்ததால், அதற்கு தேசிய தலைவர்தான் பதில் அளிப்பது காத்திரமானதாக இருக்கும் என்பதாலும் நடாத்தப்பட்டது.

இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதற்கான தேசியத்தலைவரின் பதில்களுக்கும் அப்பால் தேசியத்தலைவர் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கும் முறைமையும் எந்தவொரு கட்டத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு மிகத்தேர்ந்த தலைவனுக்கு உரிய அணுமுறையை கையாண்டதாகவே, ஒரு பழுத்த இராஜதந்திரிக்கே உரிய வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்தியதாகவுமே ஆச்சரியத்துடன் உலக ஊடகங்கள் எழுதின.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளரான ரஞ்சன் பெரேரா கூறுகையில் பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்வாகும். 300க்கும் மேற்பட்ட உள்நாட்டு- வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது.

பிரபாகரனை பற்றிய எவ்வளவோ கதைகளும் கற்பனைகளும் பரவி இருந்தவேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாக காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளை போக்கின என்றே சொல்ல வேண்டும் என்று சொன்னார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் கொடுத்த பதில்கள் வெறுமனே அந்த ஊடகம் கேட்ட கேள்விக்கான பதில் என்பதாக மட்டும் இல்லாமல் அதனை பார்க்கும், கேட்கும், வாசிக்கும் உலக அரங்கிற்கு சொல்லப்பட்ட பதில்களாகவே மிகவும் அற்புதமாக அமைந்திருந்தன.

என்றுமே சிங்கள பேரிவாதம் அதன் அடக்குமுறை முகத்தை மாற்றிக்கொள்ளாது என்று வரலாற்று அனுபவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருந்தாலும் பிரிந்துசெல்லும் முடிவை மாற்றுவதற்கான அணுகுமுறை சிங்களத்தின் நடைமுறையில்தான் இருக்கின்றது என சொல்லி இருந்தார்.

மீண்டும் ஆயுதந்தாங்கி போராட விடுதலைப்புலிகள் போகபோகிறார்கள் என்ற கருத்தை தேசியதலைவரின் வாயால் சொல்ல வைப்பதற்காக

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.? என்று கேட்கப்பட்டபோது மிகவும் இலாவகமாக வார்த்தையை தெரிவுசெய்து

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று சொன்னதும்,

பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது சிங்களதேசத்தின் ஒரு அதிபர் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்கு எத்தகைய தடங்கல்களை கொடுப்பார் என்று தெரிந்திருந்தும்

சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. என்பதுடன் நின்றுவிடாமல்

அவர் அப்படி ஏதும் செய்தால் அதை பார்த்து கொள்வது ரணிலின் பொறுப்பு என்று சொன்னதன் மூலம் பதிலிலேயே ரணிலுக்கான செய்தியையும் சொல்லி இருந்தது இன்றும் ஆச்சர்யத்துடன் நோக்கப்படுகிறது.

ஏறத்தாழ இதே மாதிரியான கேள்வி ஒன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் சண்டே இதழுக்காக அனிதா பிரதாப்பால் கேட்கப்பட்டபோது,

ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தி இருந்திருக்க மாட்டேன் என்று கூறியிருந்ததும் தலைவர் சிங்களதேச அதிபர்களை பார்க்கும் எப்படி பார்க்கிறார் என்று காட்டியிருந்தது.

என்னை பொறுத்தவரையில் இந்த இனத்துக்கென்று தனியான ஏதும் கைகாட்டிநூலோ, வழிகாட்டி புத்தகமோ தேவையில்லை. தேசியத்தலைவரின் அனைத்து பேட்டிகளையும் அவரது அனைத்து மாவீரர் உரைகளையும் தொகுத்தாலே அதற்குள் இந்த இனம் இப்போது செல்லவேண்டிய திசையும் பாதையும் அதற்கான பக்குவமான முறைகளும் பொதிந்து கிடக்கும்.

இருள்நிறைந்த இந்நேரத்தில் அவைகளே பாதை வெளிச்சங்களாக ஒளிதரக் கூடியவை.

ச.ச.முத்து

காணி நிலத்திடையே வீடுகள் கட்டித்தர வேண்டும்! - நக்கீரன்

cv799
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணிநிலம் வேண்டும் என்ற கட்டுரையை வியாழன் (ஏப்ரில் 2) இரவு எழுதி முடித்துவிட்டு நித்திரைக்குப் போய்விட்டேன். அரசு முதல் கட்டமாக 1,000 ஏக்கர் காணி கையளிக்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு கிராமசேவைப் பிரிவுகளில் 197 ஏக்கர் காணியும் வலிகாமம் கிழக்கில் வளலாய் கிராம சேவகர் பிரிவில் 233 ஏக்கர் காணியும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணி மட்டுமே மக்களுக்கு கையளிக்கப்பட்டது என எழுதியிருந்தேன். மிகுதி 570 ஏக்கர் காணிபற்றி ஒன்றும் தெரியாது இருந்தது. Read more...

போருக்குப் பின்னரும் பிளவுபட்டுக் கிடக்கும் வடக்கும் தெற்கும்

kili water tank
தமிழ்ப் போராளிகளின் சாதனைகளை நாங்கள் பேருந்துகளில் சென்று கொண்டாடினால் சிங்களவர்களின் உணர்வுகள் எப்படியிருக்கும் என நான் அடிக்கடி நினைப்பேன்’ என கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் ஒத்துழைப்பிற்கான ஒருங்கிணைப்பாளரான 50 வயதான கிறிஸ்ரி சாந்தினி தெரிவித்தார். 

இவ்வாறு அமெரிக்கா ஊடகமான ‘லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்’ இல் SHASHANK BENGALI என்ற ஊடகவியலாளர் தனது யாழ்ப்பாணத்துக்கான பயணம் குறித்து விபரித்துள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. Read more...

தனிச் சிங்கள தேசிய கீதம் : சிங்களமயமாக்கலின் நீட்சி!!?

national anthem 1
தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இனவாத அணிகள் களமிறங்கியுள்ளன. தமிழில் தேசிய கீதம் பாடலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்ததைத் தொடர்ந்து இந்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. எதிர்த்தவர்களுக்கு பதிலடியாக அரச தரப்பு கூறும்போது ஏற்கெனவே தமிழில் பாடப்பட்டுக்கொண்டிருந்த தேசிய கீதத்தை 2010இல் இனவாத மகிந்த அரசு தடை செய்தது. அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும். அதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமில்லை.” என்றது. Read more...

கட்டுரை