20 April 2018
RSS Facebook Twitter   

550x60

கிளி மகாராஜாவிற்கு Magenta உரிமையாளருடன் பாலியல் பொறாமை!

maharaja ex
சிரச ஊடக வலயமைப்பின் 75 வது நிறைந்த உரிமையாளர் கிளி மகாராஜாவிற்கு Magenta விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் பிரசாந்த் சுப்ரமணியம் தொடர்பில் பாரிய பாலியல் பொறாமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அந்தபுரத்தில் இருந்து காதலி ஒருவரை கடத்திச் சென்றதால் மகாராஜாவிற்கு பிரசாந்த் தொடர்பில் கடும் அதிருப்தி காணப்படுவதாக சிரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களை தயார் செய்ய Magenta நிறுவனத்தை நாடுமாறு மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷவிற்கு பணித்துள்ளார். இது தொடர்பில் பசில் சிரசவிற்கு Magenta நிறுவனத்திடம் இருந்து 360 மில்லியன் பெறுமதி விளம்பரத்தைப் பெறுமாறு அறிவித்துள்ளார். எனினும் இந்த Magenta விளம்பர நிறுவனத்திற்கு கொமஷன் வழங்க முடியாது என அறிவித்துள்ளார். சாதாரணமாக விளம்பர நிறுவனத்திற்கு வழங்கப்படும் 15% கொமிஷன் பணத்தை ஏன் வழங்க முடியாது என பசில் சிரச நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த மகாராஜாவின் இணைப்பாளர் 'ஐயோ சேர் பில்லியன் கணக்கில் விளம்பரம் தருவதாகக் கூறினாலும் எமது பெரியவர் Magenta விளம்பர நிறுவனத்தை விரும்பவே மாட்டார். Magenta நிறுவன உரிமையாளர் எமது பெரியவரின் பெண் ஒருவரை கடத்தியதால் அவர் கோபத்தில் உள்ளார். அதுவே காரணம். 360 மில்லியனை நேரடியாக பெறுமாறு பெரியவர் பணித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி Magenta விளம்பர நிறுவனத்தை தவிர்த்து சிரச வலயமைப்புக்கு 360 ரூபாவை பசில் நேரடியாகச் செலுத்தியுள்ளார். அத்துடன் மஹிந்த கூட்டத்தில் பாரிய மக்கள் கூட்டம் இருப்பது போல செய்திகளில் காட்டவென சிரச ரிவி வீடியோ அனுசரணைக்கு மேலும் 527 மில்லியன் மஹிந்த ராஜபக்ஷ கொடுத்துள்ளார். இந்த திட்டத்தை கிளி மகாராஜாவின் நெருங்கிய இணைப்பாளர் நீட்ரா வீரசிங்க செயற்படுத்தியுள்ளார். மஹிந்த சார்பில் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமீந்திர ராஜபக்ஷ இத்திட்டத்தை கண்காணித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு 200 மில்லியன் ரூபாவை சிரசவிற்கு அளித்துள்ளார். அதை 1:3 உயர்த்தி 600 மில்லியன் ரூபாவிற்கு சிரச மைத்திரிபால சிறிசேனவிற்கு விளம்பரம் செய்துள்ளது. அதற்கு நன்றிக்கடனாக சிறிசேன ஜனாதிபதியின் பேச்சாளராக சிரச செய்தி பணிப்பாளர் நியமிக்கப்பட்டதோடு புதிய அலைவரிசை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. சிரச வெசாக் வலயத்தை திறந்து வைக்க ஜனாதிபதி சென்றபோது கிளி மகாராஜாவின் அறைக்குள் வைத்து தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் சுஹேரை தொலைபேசியில் அழைத்து சிரசவிற்கு அலைவரிசை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரி பணித்துள்ளதாக தெரியவருகிறது.

போர்ட் சிட்டி வேலைத் திட்ட முகவர்களிடம் இருந்து சிரச கப்பம் பெற்றதாக நாம் முன்னதாக தகவல் வௌியிட்டிருந்தோம். 3 மில்லியன் அமெரிக்க டொலரை சிரச சீனாவிடம் இருந்து கப்பமாகப் பெற்றது. சிரச நிகழ்ச்சிப் பணிப்பாளர் செவான் டேனியல் ஊடாக இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றது. போர்ட் சிட்டி திட்டத்திற்கு வௌ்ளை அடிக்கும் வேலையில் ஈடுபட்ட சிரச ரண்பூமி என்ற நிகழ்ச்சியை தொடங்கி நாட்டு மக்களை முட்டாள்களாக்கியது. இந்த ரண்பூமி திட்டத்தின் இறுதி நிகழ்வு அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இதில் சிரச சார்பில் செவான் டேனியல் மற்றும் பிரியந்த விஜேசிங்க ஆகியோர் மாத்திரம் பங்கேற்றனர். போட்ட ஒப்பந்தத்தை வெற்றியாக்க போர்ட் சிட்டி அதிகாரிகள் அனைவரையும் சிரச இந்த நிகழ்வு இடத்திற்கு வரவழைத்தது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன் அதன்மூலம் கிளி மகாராஜாவால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைபோல ஜனாதிபதி மாறியமை கவலைக்குரியதாகும். மஹிந்த, கோட்டா போன்று மைத்திரிக்கும் அழிவு நோக்கிய பாதையை சிரச காட்டும்.

சிறப்புச் செய்தி