21 February 2019
RSS Facebook Twitter   

550x60

இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் மங்களவா? மகேசினியா?

Kolonne
பிரபல மஹிந்த - சஜின்வாதியான மகேசி கொலொன்ன வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் மேல் சென்று செயற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. அதன்மூலம் மகேசி வௌிவிவகார அமைச்சர் போன்றுள்ளார். லக்ஷமன் கதிர்காமர் வௌிவிவகார அமைச்சராக செயற்பட்ட போது 1998ம் ஆண்டு மகேசி வௌிவிவகார அமைச்சில் இணைந்தார். அவருக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பல்கலைக்கழக பட்டம் இருக்கவில்லை. ஆனால் தேர்வு பரீட்சையில் அரசியல் தலையீட்டில் அது மறைக்கப்பட்டது. அதன்படி பின்கதவில் அவர் நியமனம் பெற்றமை உறுதி. 2013இல் அநுரகுமார திஸாநாயக்க இப்பெண் குறித்து கருத்து வௌியிட்டிருந்தார்.

2015 மார்ச் 20 கொழும்பு டெலிகிராப் தகவல்படி சஜின்வாஸ் ஆட்டிப்படைத்த வௌிவிவகார அமைச்சில் மகேசி பிரதானியாக செயற்பட்டுள்ளார். சேனுகா செனவிரத்ன, மஜிந்த ஜயசிங்க, ரொட்னி பெரேராவும் இதில் கூட்டு. அப்போதைய வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுற்கு மேல் இருந்த இவர்கள் வௌிவிவகார சேவையை அழித்தனர். அரசாங்கம் மாறியபோதும் வௌிவிவகார அமைச்சை ஆட்டிப் படைத்த பேய், பிசாசுகள் இன்னும் தலைவிரித்தாடுவதை காண முடிகிறது.

மஹிந்தவின் தோல்வியின் பின் எழுச்சியடைந்த மகேசி தற்போது மங்கள சமரவீரவின் நம்பர் வன் விசுவாசியாக செயற்படுகிறார். அதற்கு காரணம் சிறந்த அனுபவமுள்ள வௌிநாட்டு சேவை ஊழியர்கள் இல்லாமையாகும். மங்கள சமரவீர 2005,2006 காலத்தில் வௌிவிவகார அமைச்சராக இருந்தபோது எஸ்.பலிகக்கார, ஜயந்த தனபால ஆகியோர் சிறந்த சேவைகளை வழங்கினர். தற்போதுள்ள சிறந்தவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் நசுக்கியும் வைக்கப்பட்டனர். அதன்பின் கூடாதவர்கள் வௌிவிவகார அமைச்சில் வளர்ச்சி கண்டனர்.

வௌிவிவகார அமைச்சின் தற்போதைய செயலாளர் வாகீஸ்வர பெயரளவு செயலாளர் ஆவார். இதற்கு காரணம் மகேசி மற்றும் பிரசாத் காரியவசம் ஆவர். அமைச்சு மற்றும் வௌிநாட்டு சேவை நிர்வாகத்தை இவர்கள் இரண்டாகப் பிரித்துள்ளனர். இவர்கள் தற்போது அமைச்சர் மங்கள சமரவீரவை தங்களுக்கு ஏற்றவாறு ஆட்டிப் படைக்கின்றனர். பிரதீப் காரியவசம் இந்திய உயர்ஸ்தானிகராக இருந்தபோது சஜின்வாஸ் அனுசரணையில் மகேசி பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவே மகேசி, பிரசாத் இருவரும் நட்பு கொண்டனர். இவ்விடயத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை.

பிரசாத் மற்றும் மகேசி இன்று மனித உரிமை சார்ந்த விடயத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பதால் அவர்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இவர்கள் எடுக்கும் எந்த தீர்மானத்தையும் அமைச்சருக்கோ, அமைச்சரவைக்கோ அறிவிப்பது கிடையாது. அக்கம் பக்கம் சொல்லப்படும் விடயங்களை கேட்டு செயற்படும் நபராக இதுவரை இருந்திராத மங்கள சமரவீர இன்று அந்த நிலைக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சருக்கு அவசியமான அதிகாரிகளை ஒதுக்கி தனக்கு சாதகமான அதிகாரிகளை அமைச்சருக்கு நெருக்கமாக வைத்துள்ளார் மகேசி. அதற்கு சிறந்த உதாரணம் பாதுகாப்பு அமைச்சின் வௌிவிவகார சிரேஸ்ட உதவி செயலாளர் சசிகலா பிரேமவர்த்தன ஆவார். இவர் சிறந்த வௌிவிவகார சேவையாளராவார். 2005-2006 காலத்தில் அமைச்சர் மங்களவுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றினார். கோட்டாபயவின் மேற்குலக எதிர்ப்பின் பின்னணியில் சசிகலா செயற்பட்டதாக மங்களவிடம் மகேசி பொய் கூறி போட்டுக் கொடுத்ததால் மங்களவும் அதனை நம்பியுள்ளார்.

ஏனைய சில ஊழியர்கள் சேவை பயிற்சிக்கு மகேசியின் அனுமதி கிடைக்காமையால் பதவி உயர்வுபெற வாய்ப்பில்லாது உள்ளனர். ஐநா ஏற்பாடு செய்யும் பயிற்சிகள் வௌிநாடுகளில் சென்று தூதுவர்களை சந்தித்து அனுபவ பகிர்வு பெறும் வகையில் அமையும். அது இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பொறாமை காரணமாக மகேசி இவ்வாறு நடந்து கொள்கிறார்.

பொது சொத்து களவு தொடர்பில் மகேசி பிரபலம் பெற்றுள்ளார். அமைச்சில் இருந்து தகவல்களை தன்னிடம் பெற்று அதனை தனது தகவல் போன்று வௌிவிவகார அமைச்சருக்கு வழங்கி வருகிறார். ஏனைய அதிகாரிகளுக்கு அவரிடம் இருந்து தகவல் பெறுவது கடினம். அதனால் தகவல்களை யாரும் இரகசியமாக வைத்துக் கொள்ளாது மறைக்காது வௌியிட வேண்டும் என அமைச்சர் பணித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சின் மற்றும் அமைச்சரின் பேச்சாளராக இருந்து கொண்டு மகேசி, கடந்த அரசாங்கத்தின் ஊழல் குறித்து தகவல் வௌியிட்டு வருகிறார். அரச ஊழியர் ஒருவரின் ஒழுக்கக் கோவையை அவர் மீறி செயற்படுவது புலப்படுகிறது. ஏனைய அதிகாரிகளைவிட தன்னை பெரியவராக காட்டிக் கொண்டு அமைச்சரிடம் பெயர் போட்டுக் கொள்ளவே மகேசி இவ்வாறு செயற்படுகிறார். ஆனால் சிலவேளை மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகேசி 180 பாகை வலைந்து மஹிந்தவுக்கு சார்பாக செயற்படுவார் என வௌிவிவகார அமைச்சின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மங்கள சமரவீரவிற்கு தெரிந்தோ தெரியாமலோ அவரின் அருகில் இருப்பது பெரிய நேர குண்டாகும். மகேசி கொலொன்ன குறித்து வௌிவிவகார அமைச்சிர் மங்கள சமரவீர நன்கு அறிந்து கொள்ளாவிட்டால் அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கும் அரசாங்கத்தின் இருப்புக்கும் விரைவில் கேடு விளைவிக்கும். வௌிவிவகார அமைச்சர் அவர்களே உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டாகட்டும்!

சிறப்புச் செய்தி