22 October 2018
RSS Facebook Twitter   

550x60

பதிவாளர் நீதிபதியின் தங்கை: நல்லாட்சியிலும் நீதிமன்ற துறையில் குழப்பம்!

court sl ex
இலங்கை நல்லாட்சியில் உயர் நீதிமன்ற பதிவாளராக உள்ள மஹேசி ஜயசேகர உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த ஜயவர்த்தனவின் சகோதரி ஆவார். இது உலக அளவில் பிரச்சினை என்பது தௌிவு. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஶ்ரீபவன் இது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் உள்ளார். தற்போதைய உயர் நீதிமன்றுக்கு பிடித்து ஒரு வகை நோய் இதுவாகும்.

பதில் பிரதம நீதியரசராக செயற்பட்ட நீதிபதி சந்திரா ஏக்கநாயக்கவின் மனைவி திஸ்ஸ ஏக்கநாயக்க 2010 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் பிரச்சார நடவடிக்கையின் நிர்வாகியாவார். அவரது அலுவலகம் அலரி மாளிகையில் இருந்தது. 18ம் திருத்தம் வந்ததன் பின் இலங்கை நீதிமன்றுக்கு செய்யப்பட்ட அனைத்து நியமனங்களும் அரசியல் ரீதியில் வழங்கப்பட்டவை என்றே கருத வேண்டும். இதில் மாற்றங்கள் எதுவும் செய்யாது மஹிந்த ராஜபக்ஷவின் தொலைபேசி அழைப்பு செல்வதில்லை என்பதற்காக இன்று நீதிமன்றம் சுயாதீனமாக இயங்குகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மஹிந்த ராஜபக்ஷ தனது நண்பர் என பகிரங்கமாக ஏற்றுக் கொண்ட நீதிபதி ஈரா வனசுந்தர, கோட்டாபயவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த போது அது நன்கு தௌிவானது. சட்டக் கல்லூரியில் மஹிந்த ராஜபக்ஷவின் சமகால நபரான பிரதம நீதியரசர் ஶ்ரீபவன், கோட்டாவின் மனுவை விசாரித்துக் நீதிபதிகள் குழுவில் இருந்து புவனெகா அலுகிகாரே விலகிபோது வேறு நீதிபதியை நியமிக்காது இரண்டு நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் அதனை விசாரணைக்கு அனுமதித்தது ஏன்?

18வது திருத்தச் சட்டத்திற்கு பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்த பாராளுன்ற உறுப்பினர்களின் அனுமதி பெற்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கே.ஶ்ரீபவனை பிரதம நீதியரசராக நியமித்தார்.

ராஜபக்ஷ ஆட்சியை போன்று நல்லாட்சியிலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நீதிமன்றங்களை காண விரும்பவில்லை. ஜனாதிபதியின் நெருங்கிய நண்பரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை விசாரணை குழுவின் நீதிபதியாவார்.

ராஜித சேனாரத்ன மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஷிராணியை மீண்டும் பிரதம நீதியரசராக காண விரும்பவில்லை என்பதால் மீண்டும் பதவியேற்ற ஷிராணி ஒரே நாளில் இராஜினாமா செய்தார். எனவே மஹிந்த ராஜபக்ஷவின் வலையில் இருந்தும் தற்போதைய அரசாங்கத்தின் சில விஷமிகளிடம் இருந்தும் நீதிமன்றை மீட்டு உண்மையான சுயாதீனத்தை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் நீதிமன்றில் உள்ள அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டும் என 'ராவய' பத்திரிகையன் ஆசிரியர் கே.டி.ஜனரஞ்சன உள்ளிட்ட ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

சிறப்புச் செய்தி