22 October 2018
RSS Facebook Twitter   

550x60

அவுஸ்திரேலிய ஆட்கடத்தல் சூத்திரதாரி ஹெந்தவித்தாரன!

kapila
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசகர் ஒருவரின் உத்தரவுகளின் அடிப்படையில் கடற்படையினரின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்நாட்களில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் இடம் பெறுகின்ற இராஜதந்திர உறவுகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுக்கு (Human smuggling) இலங்கை கடற்படையினர் தொடர்பு என பிரதமரின் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதோடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவின் ஆலோசகர் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி மேஜர் கப்பில ஹெந்தவித்தாரனவின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் ஒத்துழைப்பு இன்றி இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்படையின் லெப்டினன் கேர்ணல் கே.சி .வெலகெதர இவ்வாறு ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்தும் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் விசாரணை இடையில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடபடுகிறது. இந்த லெப்டினன் கேர்ணல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

2012 மற்றும் 2013ம் ஆண்டு படகுகள் மூலம் யாழ்பாணம், மன்னார், சிலாபம், நீர்கொழும்பு, வத்தளை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து 120 படகுகள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்டுள்ள படகுகளில் ஒரு படகிற்கு சுமார் 100 , 150ற்கு இடைப்பட்ட மக்கள் அனுப்பபட்டுள்ளனர் அதில் அதிகமானோர் தமிழ் மக்கள். இவ்வாறு அனுப்பப்பட்ட மக்களில் ஒருவரிடம் தலா 10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகளின் ஓட்டுனராக செயற்பட்டவர்கள் கடற்படையினரே எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆட்கடத்தல் தொடர்பான பூரண தகவல்களை விரைவில் ஆதாரத்துடன் வௌியிட நாம் காத்திருக்கிறோம். 

சிறப்புச் செய்தி